election

img

இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள்!

இந்தியாவில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 96.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என இந்தியத் தேர்தல் ஆணையம் தகவலை வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. 
அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் ஆண் வாக்காளர்கள் 49.72 கோடியும், பெண் வாக்காளர்கள் 47.15 கோடியும், மூன்றாம் பாலினத்தவர் 48 ஆயிரத்து 44 பேரும், புதிய வாக்காளர்கள் 2.63 கோடியும் தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தவர்களை விட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதாவது, கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது, இந்தியாவில் 89.6 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர்கள் எண்ணிக்கை, சுமார் 7 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.
மேலும், புதிதாகப் பதிவு செய்துள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முதல் முறையாக வரும் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். புதிய வாக்காளர்களில் 1.41 கோடி பேர் பெண்கள்; 17 நிறைவடைந்து பதிவு செய்தவர்கள் 10.64 லட்சம் பேர்
மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 88 லட்சத்துக்கு 35 ஆயிரம் பேர் உள்ளதாகவும், மறைந்த வாக்காளர்கள் 67.82 லட்சம் பேரும், நிரந்திரமாக இடம்மாறிச் சென்ற 75.11 லட்சம் பேரும், இரு இடங்களில் பெயர் பதிவாகி இருந்த 22.05 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

;